“காங்கிரஸ் மூத்த தலைவர் சதானந்த் சிங் மறைவு;அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது” – மதன் மோகன் ஜா…!

Default Image

பீகார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிங் இன்று காலை காலமானார்.

பீகாரின் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள கஹல்கான் தொகுதியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சதானந்த் சிங் ஒன்பது முறை எம்எல்ஏவாக பணியாற்றினார்.அதன்பின்னர்,சதானந்த் சிங் பீகார் சட்டமன்றத்தின் சபாநாயகராக 2000 முதல் 2005 வரை இருந்தார்.மேலும், அவர் பீகார் நீர்ப்பாசனம் மற்றும் எரிசக்தி அமைச்சராகவும் முன்னதாக பணியாற்றினார்.

இந்நிலையில்,சதானந்த் சிங் இன்று காலை காலமானார்.அவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில்,இரங்கல் தெரிவித்த பீகார் காங்கிரஸ் தலைவர் மதன் மோகன் ஜா, “அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது” என்றார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“பீகாரின் புகழ்பெற்ற தலைவரும், காங்கிரஸின் போர்வீரருமான சதானந்த் சிங் ஜி இன்று காலமானார். ஒரு அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. உங்கள் புன்னகை முகம் எப்போதும் நினைவில் இருக்கும். கடவுள் அவரது ஆன்மா சாந்தியடையட்டும். மேலும் அவருக்கு பலம் கொடுங்கள்” இந்த தாங்கமுடியாத சோகமான நேரத்தை குடும்பம் தாங்கும். ஓம் சாந்தி, ”என்று பதிவிட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து,ராஜஸ்தான் எம்.பி கேசி வேணுகோபால் இரங்கல் தெரிவித்து கூறியதாவது:

“ஸ்ரீ சதானந்த் சிங் ஜியின் மறைவு வருத்தமளிக்கிறது.கஹல்கான் தொகுதியில் இருந்து 9 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு புத்திசாலித்தனமான அரசியல்வாதி, குடிமக்களின் நலனே அவரது முன்னுரிமை.அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காங்கிரஸ் அவரது நுண்ணறிவு மற்றும் அனுபவத்தை ஆழமாக இழக்கும்”,என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்