வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும்…!
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், வரும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கேரளா, கர்நாடகா கடலோர பகுதி, தென்மேற்கு மத்திய அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.