தடையை மீறி விநாயகர் சிலை வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் – சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!
தடையை மீறி விநாயகர் சிலை வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதிலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, வருகிற விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு சில கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விநாயகர் சதுர்த்தியை வீடுகளில் இருந்தபடியே மக்கள் கொண்டாடலாம் எனவும், தெருக்களில் ஊர்வலமாக விநாயகர் சிலையை கொண்டு செல்லக் கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசிய பொழுது, விநாயகர் சதுர்த்தி அன்று தடையை மீறி விநாயகர் சிலையை பொது இடத்தில் வைத்து வழிபட்டாலோ அல்லது ஊர்வலமாக எடுத்துச் சென்றாலோ கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலையை பொது இடங்களில் வைப்பது தவறு என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்.