உலக சினிமாவை தமிழ் மொழியில் தரும் வெற்றிமாறன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து -சூரி.!

Default Image

இயக்குனர் வெற்றிமாறனுக்கு நடிகர் சூரி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் வெற்றிமாறன். இந்த படத்தை தொடர்ந்து ஆடுகளம் என்ற படத்தை இயக்கியனார். இந்த திரைப்படம் தேசிய விருதை வென்றது. அடுத்ததாக விசாரணை, வடசென்னை, அசுரன் ஆகிய அற்புதமான படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். இதில், அசுரன் திரைப்படமும் தேசிய விருதை வென்றுள்ளது.

இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக “விடுதலை” என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக சூரி நடிக்கிறார்.மக்கள் செல்வன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று இயக்குனர் வெற்றிமாறன் தனது 46-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் சமூக வலைதளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் சூரி, தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் ” மக்கள் வாழ்வியல் பேசும் உலக சினிமாவை தமிழ் மொழியில் தரும் அண்ணன் வெற்றிமாறன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்‌” பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்