#BREAKING: கோயில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணமில்லை – அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு
திருக்கோயில்களில் மொட்டையடித்தால் இனி கட்டணம் இல்லை என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர்சேகர் பாபு அறிவிப்பு.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதுபோன்று, மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் திருமணம் நடத்த கட்டணம் இல்லை என்றும் அறிவித்துள்ளார். மேலும், இந்து அறநிலையத்துறை சார்பில் 10 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.