ஐடா புயல் பாதிப்புகள் – நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க அதிபர்!

அமெரிக்காவில் அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திய ஐடா புயல் பாதிப்புகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேரில் ஆய்வு செய்துள்ளார். 

அமெரிக்காவிலுள்ள லூசியானா மாகாண பகுதியை அதிகளவில் தாக்கிய ஐடா புயல் காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இந்த ஐடா புயல் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியே இருளில் மூழ்கிய நிலையில் உள்ளது.

இந்நிலையில், இன்று புயல் பாதித்த பகுதிகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதன் பின் அந்த பகுதியில் உள்ள மக்களிடம் பேசிய அவர், ஏற்கனவே லூசியானா மாகாணத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம். உங்களுக்கு மேலும் உதவி செய்வதற்கான உரிய  நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என அவர் உறுதியளித்துள்ளார்.

author avatar
Rebekal