#BREAKING: பஞ்சு மீதான 1 % நுழைவு வரி ரத்து – முதல்வர் அறிவிப்பு..!

Default Image

பஞ்சுக்கான 1%  நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி 110 கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளிமாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் பஞ்சுக்கான 1%  நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று பஞ்சு மீதான நுழைவு வரி ஒரு சதவிகிதம் ரத்து செய்யப்படுகிறது.

இதற்கான சட்டத்திருத்தம் இந்த சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட உள்ளது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்