பிஎஃப் விதிகளில் புதிய மாற்றம் செய்துள்ள மத்திய அரசு..!
மத்திய அரசு இந்த நிதியாண்டு முதல் பிஎஃப் கணக்குகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், இந்த நிதியாண்டு முதல் இரண்டு பிஎஃப் கணக்குகளை திறந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இரண்டரை லட்ச ரூபாய்க்கு அதிகமாக உள்ள பிஎஃப் பங்களிப்புக்கு கிடைக்கக்கூடிய வட்டிக்கு வரி விதிக்கப்படுவதாக 2021 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 2.5 லட்சத்துக்கு அதிகமாக பிஎஃப் செலுத்துவோர் வரிக்குட்பட்ட பங்களிப்பு, வரிக்குட்படாத பங்களிப்பு என்று இரண்டு விதமான கணக்குகளை திறந்து வைத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இரண்டு பிஎஃப் கணக்குகள் வைத்திருப்பதன் வாயிலாக வட்டி கணக்கிடப்படுவது எளிமையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய மாற்றங்கள் 2021 மார்ச் மாதத்திற்கு பின்னரே பொருந்தும். இதனை அடுத்து, 2021 மார்ச் மாதத்திற்கு முன் உள்ள பங்களிப்பு வரிக்குப்படாத பிஎஃப் கணக்கிலும், அதன் பிறகு உள்ள பங்களிப்பு வரிக்குட்பட்ட பிஎஃப் கணக்கிலும் சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.