“கடற்பசு பாதுகாப்பகம்” அமைக்கப்படும்-அமைச்சர் அறிவிப்பு..!

Default Image

கடல்பசு இனத்தை பாதுகாக்கும் பொருட்டு “கடற்பசு பாதுகாப்பகம்” மன்னார் வளைகுடா, பாக் விரிகுடா பகுதியில் ஏற்படுத்தப்படும் என  அறிவிக்கபப்ட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10-வது நாளாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இன்று மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் அழிந்து வரும் நிலையில் உள்ள மிக அரிதான கடல்பசு இனத்தை பாதுகாக்கும் பொருட்டு “கடற்பசு பாதுகாப்பகம்” மன்னார் வளைகுடா, பாக் விரிகுடா பகுதியில் ஏற்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும், மன்னார் வளைகுடா மற்றும் பாக் கடற்பகுதியில் காணப்படும் கடற்பசு என்பது மிக அரிய வகை கடல்வாழ் பாலூட்டியாகும். கடல்மாசு மற்றும் கடல்  கடற்புல் அழிக்கப்படுவதால் இந்த இனம் அழிவை சந்தித்து வருகிறது. இதை பாதுகாக்கும் பொருட்டும் இந்தியாவில் முதல் முறையாக “கடற்பசு பாதுகாப்பகம் ” இப்பகுதியில் சமூகப்பங்களிப்புடன் ஏற்படுத்தப்படும் நாட்டின் வளமையான கடல் வாழ் உயிர்ப்பன்மை பாதுகாப்பிற்கு இக்காப்பகம் உதவி புரியும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்