மெகா கூட்டணி.! பாலா – சூர்யா – யுவன் – அதர்வா – கீர்த்தி.!?

இயக்குனர் பாலாவின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக கொடுப்பவர் இயக்குனர் பாலா. தான் இயக்கிய முதல் திரைப்படமான சேது படத்திலே பல விருதுகளை வென்றார். கடைசியாக இவரது இயக்கத்தில் வர்மா படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தை தயாரிக்கிறார்.
இந்த நிலையில், தற்போது இயக்குனர் பாலா அடுத்ததாக நடிகர் அதர்வா வை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதனையடுத்து தற்போது கிடைத்த தகவலின் படி, பாலா- அதர்வா – கீர்த்தி இணையும் இந்த படத்தை சூர்யா தயாரிக்கவுள்ளதாகவும், படத்திற்க்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025