#BREAKING: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – தனிப்படை அமைப்பு!

கோடநாடு தொடர்பான வழக்கு மீண்டும் சூடுபிடித்து வரும் நிலையில், இதுகுறித்து விசாரிப்பதற்காக தனிப்படை அமைப்பு.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்படும் என நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் தெரிவித்துள்ளார். கோடநாடு தொடர்பான வழக்கு மீண்டும் சூடுபிடித்து வரும் நிலையில், இதுகுறித்து விசாரிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையானது கோடநாடு தொடர்பான வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தனிப்படையில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இன்று உதகை நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், வழக்கு தொடர்பான சயான், மனோஜ் ஆஜரானார். அப்போது, அரசு தரப்பில், புலன் விசாரணை நடத்த அவகாசம் கோரப்பட்டது. இதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025