OTT-யில் வெளியான படங்கள் திரையிடப்படாது – திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு
ஓடிடி-யில் வெளியான திரைப்படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு.
கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு சில பல படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சில தயாரிப்பாளர்கள் ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்குகளில் வெளியீட ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ஓடிடியில் வெளியான படங்களை திரையிடுவதில்லை என தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஓடிடி விற்பனைக்கான முன்னோட்ட காட்சிக்கும் திரையரங்குகளில் வழங்குவதில்லை. திரையரங்கில் வெளியான 4 வாரங்களுக்கு பின் ஓடிடியில் வெளியிட்டால் மட்டுமே படங்களை திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.