நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விஷாலுக்கு ஜோடியான சுனைனா.!

Default Image

விஷாலின் 32-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடிக்கிறார். 

தமிழ் சினிமாவில் முன்னை நடிகராக வலம் வரும் விஷால் தற்போது து.ப.சரவணன் என்பவரது இயக்கத்தில் வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 32-வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை அசோக் என்பவரது இயக்குகிறார். நடிகர்கள் ரமணா, நந்தா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடிக்கிறார். சமர் படத்தை தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு விஷாளுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்