#Breaking:”தியாகிகள் பென்சன் ரூ.10 ஆயிரமாகவும்;ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.25 ஆயிரமாகவும் உயர்வு” – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!

Default Image

புதுச்சேரியில் தியாகிகள் பென்சன் ரூ.9 ஆயிரத்திலிருந்து ரூ.10,000 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வருகிறது.அதன்படி,இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுச்சேரி முதல்வர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.அதன்படி,

  • புதுச்சேரியில் தியாகிகள் பென்சன் ரூ.9 ஆயிரத்திலிருந்து ரூ.10,000 ஆயிரமாக உயர்த்தப்படும்.
  • பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தப்படும்.
  • ஆதிதிராவிட மற்றும் பட்டியலின மக்களின் ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.
  • பயிற்சி மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
  • புதுச்சேரி சுகாதாரத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.
  • பிற்படுத்தப்பட்ட மேம்பாட்டுக் கழகம் மூலம் மாணவர்கள் பெற்ற கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
  • சென்டாக் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்.
  • புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு,குறைந்த பட்ச ஊதியம் மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்