#Breaking:9 மாவட்டங்களில் 6 ஆயிரம் வீடுகள் கட்ட முடிவு – குடிசை மாற்று வாரியம்…!

Default Image

9 மாவட்டங்களில் 6 ஆயிரம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் குடிசைமாற்று வாரியம் கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, வீட்டு வசதித் துறை & நகர்ப்புற வளர்ச்சித் துறை, சமூக நலன் & மகளிர் உரிமைத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.மேலும்,தமிழ்நாடு நீக்கறவு செய்தல் சட்ட முன்வடிவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்கிறார்.

இந்நிலையில்,உலக வங்கி நிதியில் நெல்லை,மதுரை,தஞ்சாவூர், சிவகங்கை, தேனி,தென்காசி, திண்டுக்கல்,சேலம்,நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ரூ.950 கோடியில் மொத்தம் 6 ஆயிரம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளதாக என்று சட்டப்பேரவையில் இன்று குடிசைமாற்று வாரியம் கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • மேலும்,வண்டலூர் பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும்.
  • கோயம்பேடு அங்காடி வளாகத்தில் தொழிலாளர்களுக்கான உணவகம்,தங்கும் விடுதி இரண்டு கோடி ரூபாயில் அமைக்கப்படும்.
  • சென்னை மற்றும் இதர நகரங்களில் 601 திட்டப் பகுதிகளில் 28,247 அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க தொழில்நுட்பக் குழு பரிந்துரை செய்துள்ளது.
  • நகர ஏழை மற்றும் குடிசைப் பகுதி வாழ் குடும்பங்களுக்கு 9.53 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் 2030 ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல,தொழிற்சாலை, சுகாதாரம், போக்குவரத்து , சுற்றுச்சூழல், கல்வி உள்ளிட்ட துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து மாநிலத்திலுள்ள பெரிய நகரங்களில் நெரிசலை தவிர்க்க முக்கிய நகரங்களைச் சுற்றி துணை நகரங்களை உருவாக்க திட்டம் உள்ளது என்றும்

சென்னை பெருநகரின் போக்குவரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், ஒருங்கிணைக்கவும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் ( CUMIA ) அமைக்கப்பட்டுள்ளது என்றும் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்