#Breaking:ஓபிஎஸ் மனைவிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்…!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவிக்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலக்ஷ்மி அவர்கள், கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில்,சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் இன்று காலை மாரடைப்பால் அவர் காலமானார்.
இதனையடுத்து,அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மருத்துவமனைக்கு சென்று, ஓபிஎஸ் மனைவி விஜயலக்ஷ்மி உடலுக்கு மரியாதை செலுத்தி,ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.மேலும்,அதிமுககட்சி நிர்வாகிகளும் நேரில் சென்று ஆறுதல் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு தற்போது முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.அவருடன்,மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்,அமைச்சர்கள் துரைமுருகன்,தங்கம் தென்னரசு,சேகர்பாபு உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.அதன்பின்னர்,ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.