டெங்கு காய்ச்சல் : உத்தர பிரதேசத்தில் 32 சிறுவர்கள் உட்பட 40 பேர் பலி!
உத்தர பிரதேச மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் 32 சிறுவர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிகளவில் பரவி வரும் நிலையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் தொடந்து பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் உத்திரபிரதேசம் மாவட்டம் பிரசோபாத் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 32 குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்ததாகவும், இவர்களிடமும் டெங்கு அறிகுறி இருந்ததாகவும் மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுவரை மதுரா, ஆக்ரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் மர்ம காய்ச்சலால் 80 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதில் டெங்கு காய்ச்சலால் 32 குழந்தைகள் உட்பட 40 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தற்போது டெங்கு மிக அதிக அளவில் பரவி வருவதாக கூறப்படுகிறது.