ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற்றம்…!
ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியது, தங்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்தது போல இருப்பதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் இருக்கக்கூடிய அமெரிக்க நாட்டு மக்கள் மற்றும் வெளியேற விரும்பக்கூடிய ஆப்கான் நாட்டு மக்களை மீட்கும் பணியில் அமெரிக்கப் படைகள் ஈடுபட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறி விட வேண்டும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின்பதாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் தங்களது படைகளை முழுமையாக வெளியேற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் தங்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்தது போல உள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது குறித்து நாட்டு மக்களிடம் இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.