தமிழகத்துக்கான உரங்களை உரிய நேரத்தில் வழங்குக – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

Default Image

தமிழ்நாட்டிற்கு உர ஒதுக்கீட்டின்படி உரிய நேரத்தில் உரங்களை வழங்குமாறு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கடிதம்.

இதுதொடர்பாக மத்திய இராசயனம் மற்றும் உரத்துறை அமைச்சருக்கு, தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், உரிய நேரத்தில் யூரியா மற்றும் டிஏபி உரங்களை உர வழங்கல் திட்டத்தின்படி முழுமையாக வழங்கவும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் உரங்களை தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களில் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலுள்ள துறைமுகத்திலும் வந்தடைய ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் நல்ல மழைப்பொழிவு பதிவானதால், உரிய நேரத்தில் மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டதால் , குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தியதன் காரணமாக நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவை காட்டிலும் அதிகமாக 4.90 லட்சம் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்