ஒரே நேரத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட 12 வாகனங்கள் – 8 பேர் காயம்!
டெல்லியிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரே நேரத்தில் பத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 12 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். எனவே, படுகாயமடைந்த சிலர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இது குறித்து வெளியாகியுள்ள தகவலின் படி அல்வார் மாவட்டத்தின் பெஹ்ரர் பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே இந்த விபத்து நடந்ததாகவும், அதிக சுமையை ஏற்றிக் கொண்டு வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.