பொதுமக்களின் கவனத்திற்கு: ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்திற்கு செல்லவேண்டாம்!

Default Image

ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை என தமிழ்நாடு போக்குவரத்துறை அறிவிப்பு.

முக்கிய ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையம் சென்று புகார் அளித்து வந்த நிலையில், தற்போது தொலைந்து போன ஆவணங்கள் குறித்து ஆன்லைனில் புகார்களை பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

காணாமல் போன பதிவுச்சான்று, ஓட்டுநர் உரிமம், அனுமதிசீட்டு, பாஸ்போர்ட், பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ், அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியம் இல்லை.

அதற்கு மாறாக e.services.tnpolice.gov.in என்ற இணைய தளத்தில் புகார் பதிவு செய்து LDR (Lost Document Report) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யும் முறை:

தமிழ்நாடு போலீஸ் அதிகாரப்பூர்வ  https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index?17 என்ற இணையதளம் செல்ல வேண்டும். Lost Document Report என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதில் Report என்ற பட்டனை க்ளிக் செய்து சரியான உங்கள் தகவலை பதிவு செய்ய வேண்டும். பின்னர் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த லீக்கை க்ளிக் செய்து தொலைந்து போன ஆவணங்கள் குறித்த புகாரை அளிக்கலாம்.  https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/LostDocumentReport?20

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்