டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழப்பு இல்லை…!
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போதும் குறைந்து கொண்டே தான் வருகிறது. இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் கொரோனா மூன்றாம் அலை இந்தியாவில் உச்சம் தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. எனவே, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவி வந்தது.
டெல்லி அரசு மேற்கொண்ட தீவிரமான கட்டுப்பாட்டு நடவடிக்கை காரணமாக, தற்போது டெல்லியில் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 48 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் உயிர் இழப்புகள் எதுவும் டெல்லியில் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 393 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.