சீமை கருவேல மரங்களை அகற்ற திட்டம் – அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
தமிழக முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் திட்டம் செய்லபடுத்தப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு.
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் ஏரிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த பணியை ஒரு திட்டமாகவே செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்தார்.
மேலும், மாநில முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் அதிகமுள்ளதாகவும், இவற்றால் விளைநிலம் தரிசாவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.