“முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் மிகவும் புரட்சிகரமானது”- காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வரவேற்பு…!

Default Image

முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த வேளாண் எதிர்ப்பு தீர்மானம் மிகவும் புரட்சிகரமானது காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கால்நடை, வேளாண்,பால்வளம் மற்றும் மீன்வள ஆகிய துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த விவாதத்தின்போது ஆரம்பத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார்.இதற்கு பாஜக,அதிமுக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தாலும்,மற்ற கட்சிகளின் குரல் வாக்கெடுப்போடு,மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக,அரசியல் கட்சியினர் பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில்,முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் மிகவும் புரட்சிகரமானது என்று கூறி காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள்,தீர்மானத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:”வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடுகிறார்கள்.ஆனால்,நாட்டின் பிரதமர் அவ்வழியாக சென்று அவர்களின் துரத்தி கூட விசாரிக்க வில்லை.

ஆனால்,தமிழகத்தில் அமைந்திருக்கிற இந்த புதிய ஆட்சியில்,தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு மட்டுமல்ல இந்தியாவில் இருக்கிற அனைத்து விவசாயிகளுக்கும் விழிப்புணர்வையும் நம்பிக்கையும் கொடுத்திருக்கிறது.ஜனநாயகம் மறைந்து விடாது என்பதற்கு இது ஒரு நல்ல சாட்சி.

மேலும்,நீண்ட காலமாக தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களின் முகாம்கள் நலிந்த நிலையில் உள்ளது.முன்னதாக,கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் மாவட்ட ஆட்சியர்களை இலங்கை தமிழர்களின்  முகாம்களுக்கு அனுப்பி பல்வேறு சீர்திருத்தங்கள் செய்தார்.

இன்றைக்கு அதற்கும் மேலாக,ஏராளமான பணத்தை தமிழக அரசு அவர்களுக்காக ஒதுக்கியுள்ளது.தமிழக காங்கிரஸ் இதனை பாராட்டுகிறது,வரவேற்கிறது.மேலும்,அவர்களின் சிரமங்கள் தவிர்க்கப் படவேண்டும்.மறுவாழ்வு மையம் என பெயர் மாற்றம் செய்ததை விட நிதி ஒதுக்கியது வரவேற்க தக்கது”,என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்