#Breaking:”இலங்கை தமிழருக்கான முகாம்கள்;இனி மறுவாழ்வு முகாம்கள் என பெயர் மாற்றம்” – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்கள் மறுவாழ்வு முகாம்கள் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் நலனுக்காக, விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய திட்டங்களை நேற்று சட்டப் பேரவையில் அறிவித்தார்.
இந்நிலையில்,இன்று நடைபெற்று வரும் சட்டப் பேரவை விவாதத்தில் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்கள் மறுவாழ்வு மையம் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக முதல்வர் கூறியதாவது:
“தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழருக்கான முகாம்கள் இனி மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும்.மேலும்,இலங்கை தமிழருக்காக நாம் இருப்போம்”,என்று தெரிவித்துள்ளார்.
.