“Welcome Home”:மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ..!
இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரரும்,போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனுமான 36 வயதான கிறிஸ்டியானா ரொனால்டோ ஜுவென்டஸு அணியில் இருந்து விலகி இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணையாவுள்ளதாக தகவல் வெளியானது.
இதனை,உறுதி செய்யும் விதமாக மான்செஸ்டர் யுனைடெட் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “Welcome Home” என்று பதிவிட்டுள்ளது. மேலும்,அவரை மீண்டும் அணியில் சேர்த்துகொள்வதில் அணி மகிழ்ச்சி தெரிவித்தது.
Welcome ????????????????, @Cristiano ????#MUFC | #Ronaldo
— Manchester United (@ManUtd) August 27, 2021
2003 – 2009 ஆம் ஆண்டு வரை மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிய ரொனால்டோ 292 ஆட்டங்களில் 118 கோல்கள் அடித்துள்ளார் . ஜுவென்டஸு அணியில் விளையாடி வந்த அவர், எதிர்பாராத விதமாய் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மென்செஸ்ட்டர் யுனைடெட் அணியில் சேர்கிறார்.
ஐந்து முறை பாலோன் டி’ஓர் வெற்றியாளரான கிறிஸ்டியானோ, இதுவரை தனது UEFA சாம்பியன்ஸ் லீக் பட்டங்கள், நான்கு FIFA கிளப் உலகக் கோப்பைகள், இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் ஏழு லீக் பட்டங்கள் உட்பட 30 முக்கிய கோப்பைகளை வென்றுள்ளார்.
உலகின் மிகவும் விளம்பரப்படுத்தக்கூடிய மற்றும் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவரான ரொனால்டோ 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஃபோர்ப்ஸால் உலகின் அதிக ஊதியம் பெறும் விளையாட்டு வீரராகவும், 2016 முதல் 2019 வரை ESPN ஆல் உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.