முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த திருமாவளவன்…!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏற்கனவே இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக சட்ட பேரவையில் இன்று இலங்கை தமிழர்களுக்கு, விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக வசித்துவரும் ஈழத்தமிழர்களின் நலன்களுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ள மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக வசித்துவரும் ஈழத்தமிழர்களின் நலன்களுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ள மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/JEDgoPX4nb
— Thol. Thirumavalavan (@thirumaofficial) August 27, 2021