ரேஷன் கடையில் இலவச அரிசி.., இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்டங்களை அறிவித்த முதலமைச்சர்!

இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடைகளில் விலையில்லாமல் அரிசி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதில், இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும். முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகிறது, இந்த பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும்.
இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும். இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது, சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் என உள்ளடக்கிய குழு அமைக்கப்படும் என கூறினார்.
இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடைகளில் விலையில்லாமல் அரசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இலங்கை தமிழர் குழந்தைகள் கல்வி மேம்பட முதல் 50 மாணவருக்கான கல்வி, விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும். மேலும், ஆண்டுதோறும் இலங்கை தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு ரூ.5 கோடி, கல்விக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் நலனுக்காக ஆண்டுதோறும் ரூ.6 என ரூ.30 கோடி ஒதுக்கப்படும். அகதிகள் முகாம்களில் உள்ள சுய உதவிக்குழுக்களுக்கு சூழல் நிதியாக தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். அரசு கல்லூரிகளில் படிக்கும் இலங்கை தமிழ் மாணவர்களின் கல்வி உதவித்தொகை உயர்த்தப்படும். பாலிடெக்னிக் படிக்கும் இலங்கை தமிழ் மாணவர்களுக்காக உதவித்தொகை ரூ.10,000 உயர்த்தப்படும்.
இலங்கை வாழ் தமிழர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வாழ்க்கையை அமைத்து தருவதை அரசு உறுதி செய்யும் என்றும் இலங்கை தமிழர் உள்ளிட்ட வெளி நாட்டினர் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார். மேலும், இலங்கை தமிழர்களின் பழுந்தடைந்த வீடுகள் சீரமைத்து தரப்படும் என பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025