திருமணத்திற்கு பின் வற்புறுத்தி பாலியல் உறவில் ஈடுபடுவது வன்கொடுமை ஆகாது – சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்!
திருமணத்திற்கு பின் வற்புறுத்தி பாலியல் உறவில் ஈடுபடுவது வன்கொடுமை ஆகாது என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் தனது கணவர் மீது பாலியல் வன்கொடுமை குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் திருமணமான மனைவியை அவருக்கு விருப்பம் இல்லாமல், வற்புறுத்தி பாலியல் உறவில் ஈடுபடுத்துவது திருமண பாலியல் வன்கொடுமை ஆகாது எனக் கூறியுள்ளனர். இருப்பினும் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது இந்திய சட்டப்பிரிவு 377 இன் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் மனைவி 18 வயதுக்கு கீழ் இருந்தால் ஒழிய திருமணத்துக்கு பிறகு கணவன் வற்புறுத்தி பாலியல் உறவு வைத்துக் கொள்வது, பாலியல் வன்கொடுமை குற்றமாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது எனவும், குற்றவாளியின் ஆதிக்கம் இயற்கைக்கு மாறான பாலியல் உறவுக்காக இருந்தால் பிரிவு 377 இன் கீழ் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானது என்று கூறமுடியாது எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.