பள்ளிகள் தொடங்கவுள்ள நிலையில் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்…!
இன்று முதல் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, செப்.1-ஆம் தேதி முதல் பள்ளிகள் சுழற்சி முறையில் திறக்கப்படவுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் தொடங்குவதற்கு முன் ஆசிரியர்கள் அனைவரும் தடுஊசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே பள்ளிகளுக்குள் ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் .சுப்பிரமணியன் அவர்கள், பள்ளியில் பனி செய்யும் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும், புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள், அரியலூரில் கர்ப்பிணிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும், தமிழ்நாட்டில் இதுவரை 3,01,75,410 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.