தொப்பையை குறைக்க உதவும் காலை உணவு ஒன்று அறியலாம் வாருங்கள்…!

aval

பெரும்பாலும் தற்போதைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இருக்கக்கூடிய ஒரு மிக முக்கியமான பிரச்சினை தொப்பை தான். அடிவயிற்றுப் பகுதியில் தங்கிய கொழுப்பு காரணமாக தொப்பை ஏற்படுகிறது. இந்த கொழுப்பை குறைப்பதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் பலர் மருந்துகளை எடுத்து கொள்கின்றனர்.

சிலர் இயற்கையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம் தான். ஆனால் அதே சமயம் தொப்பையை குறைப்பதற்கு உணவு முறைகளிலும் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இன்று நாம் தொப்பையை குறைக்க காலை நேரத்தில் சாப்பிடக்கூடிய உணவு ஒன்றை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • வெள்ளை அவல்
  • தயிர்
  • எலுமிச்சம் பழம்
  • சீரகம்
  • தண்ணீர்

செய்முறை

ஊற வைத்தல் : முதலில் நான்கு ஸ்பூன் சீரகத்தை சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு மற்றொரு கிண்ணத்தில் அவலை  சேர்த்து, அதனுடன் தேவையான அளவு தயிர் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி, அவற்றையும் ஒரு அரைமணி நேரம் அப்படியே ஊற வைத்துவிட வேண்டும்.

வேகவைத்தல் : அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஊற வைத்துள்ள சீரகத்தை அதில் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். பின்பு சீரகம் நன்கு கொதித்ததும், அதனை நன்றாக ஆறவைத்து அதில் உள்ள தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த சீரகத் தண்ணீரில் பாதியளவு எலுமிச்சையை பிழிந்து நன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

அவல் : பின் ஊற வைத்துள்ள தயிருடன், இந்த சீரக தண்ணீரை அருந்தி சாப்பிட வேண்டும். நிச்சயம் தொப்பை குறைய இந்த உணவு மிகவும் உதவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation