#BREAKING : டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு…! எதிர்க்கட்சி தலைவர்களுக்கு திமுக அழைப்பு…!

Default Image

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரக்கூடிய திமுக அலுவலக திறப்பு விழாவிற்கு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு திமுக அழைப்பு.

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரக்கூடிய திமுக அலுவலகம், வரும் செப்.17 அல்லது 18-ஆம் தேதி திமுக அலுவலகம் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி மூலம், திமுக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வுக்காக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்கண்ட் முதல்வர், சட்டீஸ்கர் முதல்வர் உள்ளிட்ட பிற மாநில முதல்வர்களுக்கும், எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதைத்தவிர இடதுசாரி கட்சிகளின் தலைவர்களையும் இந்த திறப்பு விழாவிற்கும் அழைப்பு விடுக்கவுள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் திமுக தலைவர்களை முறைப்படி அழைப்பு விடுக்க உள்ளனர்.

மேலும், இந்த விழாவில் தமிழக முக்கிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியானது, எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும்  நிலையில், ஒரு மாநில கட்சியாக இருந்து திமுகவும் தொடர்ந்து இந்த பணிகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பட்சத்தில், இந்நிகழ்ச்சி தேசிய அளவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக கருதப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்