தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!

Default Image

டெல்லி பல்கலைக்கழகத்தின் பி.ஏ.ஆங்கிலப் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் பி.ஏ.ஆங்கிலப் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளான மஹாஸ்வேதா தேவியின் ‘திரௌபதி’, பாமா எழுதிய சங்கதி மற்றும் கவிஞர் சுகிர்தராணி எழுதிய கைம்மாறு, என்னுடல் படைப்புகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.இவை பல்கலைக்கழக தேர்வுக் குழு ஆலோசனைக் பின்பாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத் துறையில் பாடப்பிரிவில் இருந்து தமிழர்கள் படைப்பு நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,ஆங்கில துறையை சேர்ந்த பேராசிரியர்களுக்கு தெரியாமலேயே இந்த படைப்புகள் நீக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீக்கப்பட்ட படைப்புகளுக்கு பதிலாக சுல்தானாவின் கனவுகள் மற்றும் ராமாபாய் இன் படைப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எழுத்தாளர் சுகிர்தராணி அவர்கள் கூறுகையில்,”டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து எனது படைப்புகள் நீக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கவில்லை. ஆனால் பட்டியலின எழுத்தாளர்கள் படைப்புகள் நீக்கப்பட்டு, உயர் வகுப்பினர் படைப்புகள் சேர்க்கப்படுகிறது. இதில் சாதிய பின்புலம் தான் இருக்கக்கூடும் என்றும், ஒரு எழுத்தாளராக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில்,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து,எழுத்துகளை அரசியல்-மதக் கண்ணாடி கொண்டு பார்க்காமல் நீக்கப்பட்ட பாடங்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

“டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தாளர் பாமாவின் சங்கதி, தமிழ்க் கவிஞர் சுகிர்தராணியின் கைம்மாறு, என்னுடல் ஆகிய மொழியாக்கப் படைப்புகளை அந்தத் துறை பேராசியர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமலேயே, மேற்பார்வைக் குழுவின் ஆலோசனையின் பெயரில் பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியிருப்பது ஒருதலைபட்சமான முடிவு. இது எவ்வகையிலும் ஏற்க முடியாத செயலாகும்.

பெண்கள் உரிமை – ஒடுக்கப்பட்டோர் விடுதலை – மானுட மேன்மை குறித்து பல படைப்புகளை வழங்கி வரும் எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் கட்சி அரசியல் – மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும் எனப் பல்கலைக்கழக நிர்வாகத்தையும் மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்