கேரளா அரசு ICU-வில் இருக்கிறது…! கொரோனா தொற்று அதிகரிப்பு குறித்து சசிதரூர் விமர்சனம்…!
கேரளாவில் திருவனந்தபுரத்தில் கேரளா அரசுக்கு எதிரான இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சசிதரூர் அவர்கள், கேரளாவில் தொற்று அதிகரிப்பு குறித்து விமர்சித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால், கேரளாவில் தொற்று பரவல் அதிகரித்தது. அந்த வகையில், நேற்று மட்டும் கேரளாவில் 31 ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, கேரளாவில் திருவனந்தபுரத்தில் கேரளா அரசுக்கு எதிரான இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சசிதரூர் அவர்கள், கேரளாவில் தொற்று அதிகரிப்பு குறித்து விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், கேரளா அரசு ICU-வில் இருக்கிறது. ஆம்புலன்சில் ஏற்றும் முன் கொரோனாவை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.