தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம்- சு.வெங்கடேசன் கண்டனம் ..!
டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்தில் பட்டியலின தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்கள் பாமா மற்றும் சுகிர்தராணியின் படைப்புகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நீக்கப்பட்ட படைப்புகளுக்கு பதிலாக சுல்தானாவின் கனவுகள் மற்றும் ராமாபாய் இன் படைப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், தில்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை தருகிறது. பொது சமூகத்தில் அழுத்தமான சலனங்களை தங்களது படைப்புகள் மூலம் ஏற்படுத்திய இவர்களின் படைப்புகள் மறுபடியும் சேர்க்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தில்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை தருகிறது.
பொது சமூகத்தில் அழுத்தமான சலனங்களை தங்களது படைப்புகள் மூலம் ஏற்படுத்திய இவர்களின் படைப்புகள் மறுபடியும் சேர்க்கப்பட வேண்டும். pic.twitter.com/NPcYEHfDkf
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 26, 2021