விஜய்சேதுபதியின் “லாபம்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
செப்டம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படம்.
மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “லாபம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தினை விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டது. தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில், மூடப்பட்ட திரையரங்குகள் அனைத்தும் 50% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, லாபம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, லாபம் திரைப்படம் வரும் செப்டம்பர் செப்டம்பர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது. ஓடிடியில் வெளியாகும் என தகவல் பரவி வந்த நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.
#Laabam Grand Release On September 9th in Theaters Near You ????#SPJhananathan @immancomposer @KalaiActor @vsp_productions @thilak_ramesh @7CsPvtPte @Aaru_Dir @yogeshdir @LahariMusic @proyuvraaj @sathishoffl pic.twitter.com/EraapMmpd1
— VijaySethupathi (@VijaySethuOffl) August 25, 2021