பேஸ்புக் நிறுவனம் அதன் மெசன்ஜர் செயலியில் புதிய அம்சங்களைக்கொண்டு வருகிறது..!
தற்சமயம் பேஸ்புக் நிறுவனம் அதன் பேஸ்புக் மெசன்ஜர் கிட்ஸ் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் பொறுத்தவரை மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. இப்போது பேஸ்புக் மெசன்ஜர் கிட்ஸ் செயலியில் ‘ஸ்லீப் மோட்” எனும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இது பெற்றோருக்கு கூடுதல் கண்ட்ரோல் தரும் வகையில் அமைந்துள்ளது.
இந்த ஸ்லீப் மோட் சிறப்பம்சம் என்னவென்றால் குழந்தை பயன்படுத்தும் சாதனத்தில் ஆஃப்டைம்களை குறிக்க முடியும், மேலம் இவ்வாறு செய்ததும் ஆப் ஸ்லீப் மோடிற்கு சென்று விடும் எனத் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய வசதி பல்வேறு மக்களுக்கும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மெசன்ஜர் கிட்ஸ் செயலியை குறிப்பிட்ட நேரம் வரை இயக்க முடியாத படி செய்யும் வசதியை வழங்க பெற்றோர்கள் கேட்டிருந்தனர், குறிப்பாக உணவு, வீட்டுப்பாடம், உறக்கம் போன்றவைக்கு செலவழிக்க செய்ய வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். எனவே பெற்றோர் கோரிக்கைக்கு ஏற்ப இந்த அம்சத்தை வழங்கி இருக்கிறோம் என பேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்லீப் மோடில் இருக்கும் போது சிறுவர்கள் குறுந்தகவல்களை அனுப்பவோ, பெறவோ, வீடீயோ கால், கேமரா மற்றும் நோட்டிஃபிகேஷன் போன்ற எதையும் பார்க்க முடியாது. மேலும் செயலியை திறக்க முயன்றால், செயலி ஸ்லீப் மோடில் இருக்கிறது, பின்னர் முயற்ச்சிக்கவும் என்ற தகவலை காண்பிக்கும் வகையில் உள்ளது.
இப்போது வழங்கப்பட்டுள்ள இந்த புதிய வசித பெற்றோர்கள் தங்களின் பேஸ்புக் அக்கவுண்ட் மூலம் இயக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்லீப் மோட் மூலம் சிறுவர்களின் மற்ற வேலைகளை செய்ய அதிக நேரம் ஒதுக்க முடியும் என பேஸ்புக் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அப்டேட் பெற பெற்றோரின் கணக்கில் இருக்கும் பேரனட் கன்ட்ரோல் சென்டர் எனும் ஆப்ஷனில் காணப்படும் ஆஃப் டைம்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்து, செயல்படுத்த முடியும்.