திடீரென கீழே விழுந்த மின் விசிறி, நூலிழையில் உயிர் தப்பிய குழந்தை – வைரல் வீடியோ உள்ளே…!

Default Image

வியட்நாமில் இரவு உணவு அருந்தி கொண்டிருந்த குடும்பத்தினர் மீது மின் விசிறி விழுந்துள்ளது; அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயங்கள் இன்றி தப்பியுள்ளனர்.

சில வீடுகளில் மின் விசிறி சரியாக பொருத்தப்படாமல் இருப்பதால் அல்லது மின் விசிறி பொருத்தி நாட்கள் சென்று விட்டால் சில சமயங்களில் கீழே விழுந்து விடுகிறது. எனவே, நாம் மின்விசிறியை மாதம் ஒரு முறையாவது சரியாக உள்ளதா என சோதிப்பது மிகவும் நல்லது. மின்விசிறி கீழே விழுந்தால் நிச்சயம் யாராவது காயம் அடைய கூடிய அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

தற்பொழுது வியட்நாமை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் 6 பேர் இரவு உணவு உண்ணுவதற்காக கீழே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத விதமாக மேலே இருந்த மின்விசிறி கீழே கழண்டு விழுந்துள்ளது. கீழே இருந்த சிறுவன் மீது மின்விசிறி விழுந்தாலும் சிறுவனுக்கு சிறிய காயம் கூட இல்லாத அளவிற்கு சிறுவனின் உயிர் தப்பியுள்ளான். அதிர்ஷ்டவசமாக இந்த குடும்பத்தினர் உயிர் தப்பிய நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்