தினகரனுக்கு போட்டியாக புதிய கட்சியுடன் களமிறங்கிய திவாகரன்!
திவாகரன் ,டி.டி.வி. தினகரனுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து தனியாக அணியை தொடங்கி உள்ளார்.
அவர் அம்மா அணி அலுவலகத்தினை திறந்து வைத்துள்ளார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, அம்மா அணிக்கு மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். அணியில் இணைய யாருக்கும் அழைப்பு விடமாட்டேன். விருப்பம் உள்ளவர்கள் அணியில் இணைவார்கள்.
தினகரனால் இழுத்து மூடப்பட்ட அம்மா அணிக்கு புத்துயிர் அளித்துள்ளேன். ஜெயலலிதா முதன்முதலில் கட்சி தொடங்கியபொழுது என்னுடைய ஆதரவாளர்களுக்கே பொறுப்புகளை தந்தார் என கூறினார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் செயல்பட விருப்பம் இல்லாத நிலையில் அம்மா அணி அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அதிமுக அம்மா அணியை பலப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்யப் போவதாக சசிகலாவின் சகோதரர் வி. திவாகரன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.