#BREAKING: சசிகலா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
சசிகலாவுக்கு எதிரான வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் லஞ்சம் கொடுத்து சொகுசு வசதி பெற்றதாக சசிகலா மீது குற்றச்சாட்டப்பட்டியிருந்த நிலையில், தற்போது சசிகலாவுக்கு எதிரான வழக்கில் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் கர்நாடக ஊழல் தடுப்பு போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். நீதிபதி கடும் எச்சரிக்கைக்குப் பிறகு, குற்றப்பத்திரிகை தாக்கலான நிலையில், இந்த வழக்கு செப்டம்பர் 7-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.