டால்மியா பாரத் நிறுவனம் டெல்லி செங்கோட்டையை தத்தெடுத்தது!
டால்மியா பாரத் நிறுவனம் ,புகழ்பெற்ற டெல்லி செங்கோட்டையை பராமரிக்கும் பணிகளுக்கான ஏலத்தை கைப்பற்றியுள்ளது. நாடு முழுவதும் 90-க்கும் அதிகமான பாரம்பரியச் சின்னங்களை தனியார் பங்களிப்புடன் பராமரிக்க கடந்த ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்தது.
அந்த வகையில் டெல்லியில் உள்ள செங்கோட்டையை 5 ஆண்டுகள் பராமரிப்பதற்கான ஏலம் நடைபெற்றது. இன்டிகோ விமான நிறுவனம், ஜிஎம்ஆர் குழுமம் போன்றவை பங்கேற்ற ஏலத்தில், 25 கோடி ரூபாய்க்கான ஏலத்தை டால்மியா பாரத் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இதையடுத்து, செங்கோட்டை பராமரிப்பு, சுற்றுலாவுக்கான மத்திய சுற்றுலாத்துறை, தொல்பொருள் துறை ஆகியவற்றுடன் அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.