என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி – நடிகர் ஆர்யா.!

Default Image

ஆர்யா பெயரை சொல்லி ரூ.70 லட்சம் பண மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து கைது செய்த காவல் துறைக்கு ஆர்யா நன்றி தெரிவித்துள்ளார். 

நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி, ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஜெர்மனியைச் சேர்ந்த இளம்பெண் விட்ஜா என்பவர் சென்னை காவல் துறையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார். இதில், நடிகர் ஆர்யாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி, விட்ஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உரிய விசாரணை நடத்தி, பதில் அளிக்குமாறு சிபிசிஐடி பிரிவுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கில், நடிகர் ஆர்யா நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு அவரும், கடந்த 10-ம் தேதி சென்னை போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆர்யாவின் செல்போனை ஆராய்ந்து பார்த்தப் போது விட்ஜாவுடன் பேசியதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, ஆர்யாவை போன்று வேறொருவர் அந்த பெண்ணை ஏமாற்றி பண மோசடி செய்து வந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதில், ஈடுபட்ட வலைதள ஐபி முகவரியை வைத்து சைபர் கிரைம் போலீசார் ராணிப்பேட்டையில் பதுங்கி இருந்த இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடித்தனர்.

விசாரணையில்,  இருவரும் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது ஹூசைனி பையாக் மற்றும்  முகமது அர்மான் என்பது தெரியவந்தது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், ஆர்யாவைப் போல  பெண்ணிடம் நடித்து 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இது குறித்து நடிகர் ஆர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் ” உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ததற்கு சென்னை காவல் ஆணையர், மத்திய குற்றப்பிரிவு ஆணையர் மற்றும் சென்னை சைபர் க்ரைம் போலீசார் ஆகியோருக்கு நன்றி. இதுவரை நான் கண்டிராத மன உளைச்சலாக இது இருந்தது. என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்