#BREAKING : நடிகர் விவேக் மரணம் – விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்…!
நடிகர் விவேக் மரணம் தொடர்பான விவகாரத்தை விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.
தமிழ் திரையுலகின் பிரபல நகைசுவை நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம், 17-ம் தேதி மரணமடைந்தார். அதற்கு முன்னதாக அவர் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில், அவரது மரணம் பல சர்ச்சைகளுக்குள்ளானது. மேலும், நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி காரணமாக தான் காலமானார் என்றும் பலர் கூறியிருந்தனர்.
இதனையடுத்து சுகாதார்த்தத்துறை சார்பில், தடுப்பூசிக்கும், விவேக் மரணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் இதுதொடர்பான புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.
நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி காரணமாகவே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அவருடைய மனுவை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே மிக விரைவில், இதுதொடர்பாக சுகாதாரத்துறைக்கு நோட்டிஸ் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்க்கு சுகாதாரத்துறை அளிக்கும் பதிலை அடிப்படையாக கொண்டு இதன் அடுத்தகட்ட நகர்வு இருக்கும் என கூறப்படுகிறது.