டெல்லி செல்லும் “பீஸ்ட்” படக்குழு.? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

Default Image

பீஸ்ட் திரைப்படத்தின் 4-ம் கட்ட படப்பிடிப்பு வரும் 1-ம் தேதி தொடங்குகிறது.

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் “பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில், செட் அமைத்து விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து படத்தில் தனது காட்சிகளை படமாக்கி முடிந்துவிட்டதால் பூஜா ஹெக்டே அடுத்த படத்திற்காக சென்றுள்ளார்.

இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், பீஸ்ட் திரைப்படத்தின் 4-ம் கட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து, செப்டம்பர் -20 ஆம் தேதி தேதி படக்குழுவினர் டெல்லி செல்கின்றனர். அங்கு 5 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதன்பின் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்