ஜவ்வரிசியை வைத்து அட்டகாசமான சுவை கொண்ட ஊத்தப்பம் செய்வது எப்படி …?
ஊத்தப்பம் சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். ஏனென்றால், அதன் சுவை அட்டகாசமானதாக இருக்கும். ஆனால், இந்த ஊத்தாப்பத்தை ஜவ்வரிசி வைத்து எப்படி தயாரிப்பது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- இட்லி அரிசி
- ஜவ்வரிசி
- உளுந்து
- கடுகு
- பெருங்காயம்
- உளுத்தம்பருப்பு
- பச்சை மிளகாய்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
அரைக்க : முதலில் அரிசி மற்றும் உளுந்து ஆகிய இரண்டையும் ஊற வைத்து தோசைக்கு அரைப்பது போல நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு மறுநாள் ஜவ்வரிசியை ஒரு அரை மணி நேரம் ஊற வைத்து அவற்றை நன்றாக அரைத்து மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.
தாளிக்க : ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுந்தம் பருப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை தாளித்து மாவில் சேர்க்க வேண்டும்.
ஊத்தப்பம் : தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதன்மீது மாவை ஊற்றி நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூவி இறக்க வேண்டும். அவ்வளவுதான் அட்டகாசமான ஜவ்வரிசி ஊத்தப்பம் தயார்.