கேரளாவில் புதிதாக 24,296 பேருக்கு கொரோனா பாதிப்பு..!
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,296 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.
கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் 24,296 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,51,984 ஆக அதிகரித்துள்ளது. இன்று கேரளாவில் 173 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் அம்மாநிலத்தில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,757 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 19,349 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 36,72,357 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கேரளாவில் தற்போது 1,59,335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 18.04 சதவீதமாக உள்ளது.