கீழடி அகழாய்வு தளத்தில் பழங்கால தங்கக்காதணி கண்டெடுப்பு….!

Default Image

சிவகங்கை கீழடி அகழாய்வு தளத்தில் பழங்கால தங்கக்காதணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள அகரம் அகழாய்வு தளத்தில் தொல்லியல் துறை சார்பில் ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், அங்கிருந்து பல்வேறு உறைகிணறுகள், பானைகள், செங்கல் கட்டுமானம், புகைப்பிடிக்கும் கருவி, பொம்மை ஆகிய பல பொருட்கள் இதுவரை  கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பணி வருகின்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ளதால் அப்பகுதியில் ஆராய்ச்சி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது இந்த பகுதியிலிருந்து காதுகளில் அணியக்கூடிய தங்க அணிகலன் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அருங்கோணம் வடிவில், நடுவில் ஒரு துளையும் கொண்ட இந்த காதணி அக்கால பெண்கள் உபயோகித்தது எனவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்