விசாரணைக் கைதி ஒருவர் சென்னை புழல் மத்திய சிறையில் கழிப்பறை சன்னலில் தூக்கிட்டு தற்கொலை!
விசாரணைக் கைதி ஒருவர் ,சென்னை புழல் மத்திய சிறையில் கழிப்பறை சன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதியான 28 வயது சக்திவேல், மாலை 4.30 மணியளவில் கழிப்பறை சன்னலில் தூக்கிட்ட நிலையில் கிடந்தார்.
லுங்கியை கிழித்து அவர் தூக்கிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி புழல் காவல்நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்றக் காவலில் உள்ள கைதி உயிரிழந்ததால் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட உள்ளது.
புழல் சிறையில்தான் கைதிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழப்பது அதிகம் என்றும் சராசரியாக இரண்டு மாதங்களுக்கு ஒரு கைதி தற்கொலை செய்து கொள்வதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.