இனிமே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வாட்சப்பில் முன்பதிவு செய்யலாம்…!
இனிமே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வாட்சப்பில் முன்பதிவு செய்யலாம்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இதுவரை இந்தியாவில், 58,89,97,805 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இனிமேல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வாட்ஸப்பில் முன்பதிவு செய்யலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எவ்வாறு முன்பதிவு செய்யலாம் என்று பார்ப்போம்.
- MyGovIndia கொரோனா ஹெல்ப் டெஸ்கின் எண் +91-9013151515-ஐ உங்கள் contact லிஸ்டில் இணைத்து கொள்ள வேண்டும். இது முதல் மற்றும் மிக முக்கிய படியாகும்.
- எண்ணை சேமித்த பின், வாட்சப்பில் அந்த எண்ணுக்குள் சென்று ‘புக் ஸ்லாட்டை’ அனுப்ப வேண்டும்.
- MyGov உங்கள் இலக்கத்திற்கு ஆறு இலக்க OTP ஐ SMS மூலம் அனுப்பும். அந்த எண்ணை உள்ளிட வேண்டும்.
- பின் உங்கள் எண்ணுடன் CoWin போர்ட்டலில் இருக்கும் உறுப்பினர்களின் பட்டியலை MyGov காண்பிக்கும்.
- பின் உங்கள் பகுதியில் உள்ள தடுப்பூசி மையங்களின் பட்டியலைக் காண்பிக்கும்.
- அதில் உங்களது இடத்தை தேர்வு செய்த பின், நீங்கள் எங்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதையும், எந்த நாளில் போட வேண்டும் என்பதையும் தெரிவிக்கும். அந்த நாளில் சென்று, குறிப்பிட்ட தடுப்பூசி மையத்தில் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.
ஏற்கனவே தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்-அப்மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வாட்சப் மூலம் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Paving a new era of citizen convenience.
Now, book #COVID19 vaccine slots easily on your phone within minutes.
???? Send ‘Book Slot’ to MyGovIndia Corona Helpdesk on WhatsApp
???? Verify OTP
????Follow the stepsBook today: https://t.co/HHgtl990bb
— Mansukh Mandaviya (@mansukhmandviya) August 24, 2021