பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பயங்கர தீ விபத்து !
ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில்,பஞ்சாப் மாநிலம் Ludhiana-வில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. Ludhiana-வின் Bahadur Ke பகுதியில், வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டது. இதில், நிறுவனத்தில் இருந்த ஏராளமான ஆடை பொதிகள், இயந்திரங்கள் உள்ளிட்டவை எரிந்தன. பணியில் இருந்த தொழிலாளி ஒருவரை காணவில்லை என்ற தீயணைப்பு துறையினர், தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றனர்.
இரண்டாவது மாடியில் வைக்கப்பட்டிருந்த ரசாயனங்களால், தீ மேலும் கொளுந்துவிட்டு எரிந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதே தொழிற்சாலையில் கடந்த மாதமும் தீ விபத்து ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.